"இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி": அகிலேஷ் குற்றச்சாட்டு
"இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி": அகிலேஷ் குற்றச்சாட்டு
"இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி": அகிலேஷ் குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 03, 2024 12:46 PM
ADDED : ஜூன் 03, 2024 12:35 PM

லக்னோ: 'பா.ஜ.,வினர் அமைதியையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைத்தார்கள். இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி செய்தார்கள்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க செய்தி சேனல்கள் முயற்சி செய்கிறது. அவர்களுக்கு சாதகமாக கருதுத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.,வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, மக்கள் கூட்டமின்றி தான் காணப்பட்டது.
சதி
பா.ஜ.,வினர் அமைதியையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்தார்கள். இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி செய்தார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.