ADDED : ஜூன் 13, 2024 07:07 AM
காரிமங்கலம் : காரிமங்கலம் அடுத்த சின்னமுதலிப்பட்டி டாஸ்மாக் மதுபான கடை பின்புறமுள்ள, மாந்தோப்பில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, சம்பவ இடம் சென்ற போலீசார் மாந்தோப்பிலுள்ள மா மரம் ஒன்றில் துாக்கிட்ட நிலையில், 32 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. பொம்மஹள்ளி வி.ஏ.ஓ., சிவதாஸ் புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.