ADDED : ஜூன் 13, 2024 07:07 AM
நல்லம்பள்ளி : நல்லம்பள்ளி தாலுகா, ஜருகு மற்றும் பரிகம் கிராமத்தில், வேளாண் துறையில் அட்மா திட்டத்தின் மூலம், தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்விளக்கம் மற்றும் முழு மானிய விலையில், விவசாயிகளுக்கு தேனீ பெட்டி மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
விவசாயிகள் தென்னை மரம், வாழை மரம் மற்றும் இதர பயிர்களில் தேனீ வளர்ப்பு செய்தால், அயல் மகரந்த சேர்க்கை திறன் அதிகரிப்பதால் மகசூல் அதிகரிக்கும். மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இதில், தேனீ பெட்டி பராமரிப்பு முறைகள் பற்றி செயல் விளக்கங்கள் மூலம், உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கடாசலம், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவசங்கரி உதவி தொழில்நுட்ப மேலாளர் கபிலன் எடுத்துக் கூறினர்.