/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2024 10:19 AM
அரூர்: அரூரில் இருந்து பகல், 12:30 மணிக்கு சங்கிலிவாடி, செல்லம்பட்டி, கீழானுார், பொய்யப்பட்டி வழியாக, கட்டரசம்பட்டிக்கு, 26 எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இது அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசு டவுன் பஸ் இயக்கப்படாததால், அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, கட்டரசம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அசோகன் என்பவர் கூறியதாவது:
கடந்த, 25ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பஸ்சாக, 26 எண் கொண்ட அரசு டவுன் பஸ் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டதால் அன்று, கட்டரசம்பட்டிக்கு பஸ் வரவில்லை. நேற்று முன்தினம் பஸ்சில் ஊருக்கு சென்றபோது நேரம் ஆகிவிட்டது. கீழானுார் வரைதான் செல்லும் எனக் கூறியதால், அரூர் திரு.வி.க., நகரில் பஸ்சில் இருந்து இறங்கி கொண்டேன். தொடர்ந்து, நேற்றும் கட்டரசம்பட்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை. இதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வேறு பஸ்சில் சென்றால், பொய்யப்பட்டியில் இறங்கி அங்கிருந்து ஊருக்கு நடந்து செல்ல வேண்டும். இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, 26 எண் டவுன் பஸ்சை முறையாக இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.