/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பா.ம.க., மனு எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பா.ம.க., மனு
எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பா.ம.க., மனு
எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பா.ம.க., மனு
எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பா.ம.க., மனு
ADDED : செப் 03, 2025 02:12 AM
கிருஷ்ணகிரி, :நீரின்றி வறண்டு வரும் படேதலாவ் ஏரி உள்ளிட்ட, 13 ஏரிகள் பயன்பெறும் வகையில் எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, பா.ம.க., மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமையில் அக்கட்சியினர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி பஞ்.,ல், படேதலாவ் ஏரி அமைந்துள்ளது. மார்க்கண்டேயன் நதியில் இருந்து கால்வாய் மூலம், இந்த ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம். இதன் மூலம் காட்டிநாயனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள, 50-க்கும் மேற்பட்ட சிறு, குறு கிராமங்கள் பயன்பெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி, பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் படேதலாவ் ஏரி கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக படேதலாவ் ஏரி முதல், காட்டகரம் ஏரி வரை கால்வாய், சிறிய தொட்டி பாலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த கால்வாய் வழியாக, இதுவரை கடைமடை ஏரிக்கு தண்ணீர் சென்றடையவில்லை. இதற்கு காரணம், கர்நாடக மாநில எல்லையில் அம்மாநில அரசு கட்டிய, யார்கோள் தடுப்பணையால், மார்க்கண்டேயன் நதிக்கு நீர்வரத்து குறைந்து, மாரச்சந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் குறைந்தது.
இதை தொடர்ந்தே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் வகையில், எண்ணேகொள் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் வலதுபுற கால்வாய், தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளி அணை வரையிலும், இடதுபுற கால்வாய் படேதலாவ் ஏரி வரையிலும் அமைக்கப்படுகிறது. இதில், வலதுபுற கால்வாய் பணிகள், 60 சதவீதமும், இடதுபுற கால்வாய் பணி, 10 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இதனால், படேதலாவ் ஏரியும், இந்த ஏரியை நம்பி உள்ள, 13 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. எனவே இத்திட்டத்தை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.