ADDED : செப் 03, 2025 02:14 AM
தர்மபுரி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், குஜராத் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை அவதுாறாக பேசியதை கண்டித்து, நாடு முழுவதும், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து, நேற்று தர்மபுரியில், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், காங்., கட்சியை சேர்ந்த ராகுலை கைது செய்ய வேண்டும் என, கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ.,வினர், 47 ஆண்கள், 11 பெண்கள் என, 58 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இதில், பா.ஜ., நகர தலைவர் ஆறுமுகம், பிரபாகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசன், சங்கீதா, மாவட்ட துணை தலைவர்கள் முனிராஜ், சித்ரா, சரிதா, பொன்னுசாமி மற்றும் மாவட்ட செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.