'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : செப் 03, 2025 02:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியம் மோட்டாங்குறிச்சி, ரேகடஹள்ளி ஆகிய, 2 ஊராட்சிகளுக்கு ஜாலிபுதுார் தனியார் திருமண மண்டபத்திலும், தர்மபுரி ஒன்றியம், திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மணிபுரம் சமுதாய கூடத்திலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஷ் ஆய்வு செய்தார். முகாமில், 1,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 45 பேருக்கு கலெக்டர் சதீஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் ஆர்.டி.ஓ.,க்கள் காயத்ரி (தர்மபுரி), செம்மலை (அரூர்), கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
* பென்னாகரம் பேரூராட்சியில், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது. பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமை வகித்தார். தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி முகாமை பார்வையிட்டார்.
இதில், 1,188 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் சண்முக சுந்தரம், பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* நல்லம்பள்ளி ஒன்றியம், பாலவாடி பஞ்.,ல் நடந்த முகாமிற்கு பஞ்., செயலாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி முகாமை பார்வையிட்டார். இதில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., நீலமேகம், தாசில்தார் பிரசன்னமூர்த்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வைகுந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே முக்குளம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பீ.டி.ஓ., சரோத்தம்மன் தலைமையில் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் கண்ணபெருமாள் முன்னிலை வகித்தார். தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.