/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நீர்தேக்க தொட்டியிலிருந்து வீணாக வழிந்தோடும் ஒகேனக்கல் குடிநீர்நீர்தேக்க தொட்டியிலிருந்து வீணாக வழிந்தோடும் ஒகேனக்கல் குடிநீர்
நீர்தேக்க தொட்டியிலிருந்து வீணாக வழிந்தோடும் ஒகேனக்கல் குடிநீர்
நீர்தேக்க தொட்டியிலிருந்து வீணாக வழிந்தோடும் ஒகேனக்கல் குடிநீர்
நீர்தேக்க தொட்டியிலிருந்து வீணாக வழிந்தோடும் ஒகேனக்கல் குடிநீர்
ADDED : ஜூன் 03, 2024 07:19 AM
அரூர் : அரூரில், சமநிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, ஒகேனக்கல் குடிநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனை எதிரில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இதிலிருந்து, அரூர் டவுன் பஞ்., மற்றும், 34 பஞ்.,ல், வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை சமநிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பி, அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாக வழிந்தோடியது. வறட்சியால் குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அடிக்கடி இது போன்று நடப்பதாகவும், இதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.