/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தொழிலாளி அடித்து கொலை; நண்பருக்கு போலீஸ் வலைதொழிலாளி அடித்து கொலை; நண்பருக்கு போலீஸ் வலை
தொழிலாளி அடித்து கொலை; நண்பருக்கு போலீஸ் வலை
தொழிலாளி அடித்து கொலை; நண்பருக்கு போலீஸ் வலை
தொழிலாளி அடித்து கொலை; நண்பருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூன் 03, 2024 07:19 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ஜங்காலஹள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் 35, கூலித்தொழிலாளி; இவரை கடந்த, 21ல் மாலை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாயக்கண்ணன், கேசவன் ஆகியோர், மது அருந்த துரிஞ்சிப்பட்டிக்கு அழைத்து சென்றனர்.
மது அருந்திவிட்டு பைக்கில் ஒட்டுபள்ளம்- ஜங்காலஹள்ளி வந்தனர். அங்கு நின்றிருந்த அவர்களது நண்பரான அதே ஊரை சேர்ந்த அறிவழகனை பார்த்தனர்.அப்போது அவர், என் மனைவியுடன் ஏன் பழகுகிறாய் எனக்கேட்டு மணிகண்டனை ஆபாசமாக பேசி இரும்பு ராடால் தலையில் தாக்கினார். படுகாயம் அடைந்த மணிகண்டனை நண்பர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணிகண்டனின் தாய் மணி புகார் படி, 8 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம், 29ல் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த, 30ல் மாலை மணிகண்டன் உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த பொம்மிடி போலீசார், அறிவழகனை தேடி வருகின்றனர்.