/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 03, 2024 07:19 AM
அரூர் : அரூர் சந்தைமேட்டிலுள்ள கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது. பின் வர்ணீஸ்வரர் கோவிலிருந்து முளைப்பாரிகையுடன் தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரவு, 9:00 மணிக்கு காளியம்மனுக்கும், உடன் சுவாமிகளுக்கும் முதற்கால யாக வேள்வி பூஜை, அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன், வேதபாராயணம், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, திருக்குடங்கள் புறப்பாடு, தொடர்ந்து, விமான கோபுர கலசங்கள் மற்றும் பரிவார சுவாமிகள் உடன் விநாயகர், காலபைரவர், சென்னம்மாள், முனியப்பன் மற்றும் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.