ADDED : செப் 12, 2025 01:55 AM
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த இருமத்துார் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் வாகனத்தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்தது தெரிந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த புவனமாணிக்கம் அதை கம்பைநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.