/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆட்டுப்பட்டியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு ஆட்டுப்பட்டியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
ஆட்டுப்பட்டியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
ஆட்டுப்பட்டியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
ஆட்டுப்பட்டியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
ADDED : செப் 12, 2025 01:55 AM
பாலக்கோடு, அண்ணாமலைஹள்ளி காப்புகாட்டிற்கு அருகே உள்ள கொத்தலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவாஜி, 55. ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டு பக்கத்தில் வந்த , 12 அடி நீள மலைப்பாம்பு, கோழி ஒன்றை விழுங்கி கக்கிய பின், ஆட்டுப்பட்டிக்கு அருகே நகர்ந்தது. பாம்பை கண்ட விவசாயி
அதிர்ச்சியடைந்து,
உடனே பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து, பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் மலைபாம்புகள் இரை தேடி கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களுக்கும் வருவதால் அச்சத்துடன் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.