/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வத்தல்மலையில் ரூ.1.02 கோடியில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்புவத்தல்மலையில் ரூ.1.02 கோடியில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு
வத்தல்மலையில் ரூ.1.02 கோடியில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு
வத்தல்மலையில் ரூ.1.02 கோடியில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு
வத்தல்மலையில் ரூ.1.02 கோடியில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு
ADDED : ஜன 04, 2024 10:34 AM
வத்தல்மலை: வத்தல்மலையில், 1.02 கோடி ரூபாய் மதிப்பில் பெரியூர் மற்றும் ஆலாபுரம் கால்நடை மருந்தக
கட்டடங்களை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்.,ல் நபார்டு திட்டத்தில், 56 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரியூர் புதிய கால்நடை மருந்தக கட்டடம் மற்றும் ஆலாபுரத்தில் நபார்டு திட்டத்தில், 45.93 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்தக கட்டடம் என, 1.02 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை, அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்து, பெரியூர் புதிய கால்நடை மருந்தக கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.
இதில், தி.மு.க., - எம்.பி.,செந்தில்குமார், தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், துணை இயக்குனர் மணிமாறன், தாசில்தார் ஜெயசெல்வம், பி.டி.ஓ., சத்யா மற்றும் அனந்தராம விஜயரங்கன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.