நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி; 15 பேர் காயம்
நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி; 15 பேர் காயம்
நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி; 15 பேர் காயம்
ADDED : மார் 23, 2025 07:21 AM

வாஷிங்டன்: நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் குரூஸ் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவின் லாஸ் குரூஸில் யங் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இங்கு கார் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் தீவிரமாக நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் குண்டுகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிப்போம். அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
லாஸ் குரூஸ் நகர கவுன்சிலரும், மேயருமான புரோ டெம் ஜோஹனா பென்கோமோ இந்த துயரத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர், 'இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என்றார்.