ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
தர்மபுரி: தமிழ்நாடு, தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'டிட்டோ ஜாக்' அமைப்பினர், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 2 நாட்களாக, சென்னை டி.பி.ஐ., வளாகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது குறித்து தர்மபுரியை சேர்ந்த, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், கோ.காமராஜ், 57, கூறியதாவது:- கடந்த, 2 நாட்களாக, 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஆசிரியர்களின் உரிமையை பறிக்கும் வகையில், 243 என்ற அரசாணையை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடைய கற்றல், கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வரை, இந்த கூட்டமைப்பின் போராட்டம் தொடரும். எண்ணும், எழுத்தும் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகிறோம்.