/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வரட்டாறு தடுப்பணை வாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்வரட்டாறு தடுப்பணை வாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வரட்டாறு தடுப்பணை வாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வரட்டாறு தடுப்பணை வாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வரட்டாறு தடுப்பணை வாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது.
இதன் மூலம், வள்ளிமதுரை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், கம்மாளம்பட்டி, ஒடசல்பட்டி, கல்லடிப்பட்டி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், வரட்டாறு தடுப்பணையின் வாய்க்கால்களை துார்வார வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: வரட்டாறு தடுப்பணையின் பிரதான மற்றும் வலது, இடதுபுற வாய்க்கால்களில் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. வாய்க்கால்களில் சிலர் கழிவுகளை கொட்டி அடைப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது தடைபடும் நிலையுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக வாய்க்காலை துார்வார வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.