ADDED : மே 19, 2025 01:39 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல், பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஹள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, நல்லம்-பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்-மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஒகேனக்கல்லில், 122.6 மி.மீ., மழை பதிவானது. தொடர்மழையால், ஏரி, குளம், தடுப்ப-ணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து துவங்கியது.
மரவள்ளிகிழங்கு, பருத்தி மற்றும் கத்திரி, தக்காளி, அவரை, முள்-ளங்கி உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மஞ்சளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவை-யான மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பசுந்தீவனங்களை சாகு-படி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்மழையால் அரூர், கம்பைநல்லுார், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.