/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்
ADDED : மே 19, 2025 01:37 AM
தர்மபுரி: -ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி, திருப்பத்துார் மற்றும் திருவண்ணா மலையில் செயல்படுகிறது. இப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், 2ம் இடமும், அந்தந்த மாவட்டங்களில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவர் சந்தோஸ்ராஜ், மாணவி செந்தமிழரசி, 500க்கு, 498 மதிப்பெண்களும், தனுஸ்யா 497, ஜீவிகா மற்றும் ஐஸ்வர்யா 496 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், 490 மதிப்பெண்-களுக்கு மேல், 81 பேரும், 480க்கு மேல், 195 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடப்பிரிவுகள் வாரியாக கணிதத்தில், 48, அறிவியல், 172, சமூக அறிவியல், 77, ஆங்கிலத்தில், ஒருவர் என, 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளியின் தலைவர் டி.என்.சி., மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்த-லைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் டாக்டர் திவ்யா ராம்குமார், ஷாவந்தி தீபக், டீன்கள் கவுசல்யா, சம்பத்குமார், பள்ளி முதல்வர்கள் மற்றும்
ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.