ADDED : ஜூன் 16, 2025 03:31 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களின், தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், மண்டல அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
இதில், தி.மு.க., மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி பேசினார். கருத்தரங்கில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தர்மபுரி மேற்கு பழனியப்பன், கிழக்கு எம்.பி., மணி, கிருஷ்ணகிரி கிழக்கு மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.