ADDED : ஜூன் 16, 2025 03:31 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, திப்பம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 28. அதே கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 17. சரவணன் வீட்டு முன்புள்ள ரோட்டில், முத்துகிருஷ்ணன் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்றுள்ளார். அவரை சரவணன் தட்டிக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் அடித்துள்ளார். கடந்த, 11ம் தேதி இரவு, 1:30 மணிக்கு சரவணன் வீட்டின் முன் நிறுத்தி-யிருந்த பஜாஜ் பிளாட்டினா பைக்கை, முத்து
கிருஷ்ணன் தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து சரவணன், ஊத்-தங்கரை போலீசில் கொடுத்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்-றனர்.
இலவச மருத்துவ முகாம்போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பாப்பானுாரில் வடலூர் வள்ளலார் தர்ம அறக்கட்டளை சார்பில், ஜோதி, கிருஷ்ணன் தலைமையில், இல-வச மருத்துவ முகாம் நடந்தது. இதனுடன் தனியார் மருத்துவம-னையான நேத்ரா கண் மருத்துவ மையம் இணைந்து, இலவச முகாமை நடத்தியது. இதில் வடலுார் வள்ளலார் அறக்கட்ட-ளையை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.