/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு
அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு
அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு
அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு
ADDED : ஜூன் 26, 2025 01:29 AM
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று பிளஸ் 1 படிக்கும், இரு மாணவர்களுக்கு இடையே புத்தகம் வாங்கி வருவது தொடர்பாக, தகராறு ஏற்பட்டுள்ளது.
தகவலின்படி அங்கு சென்ற கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் நிர்மலா, விசாரணை மேற்கொண்டார். இதனால், பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து இன்ஸ்பெக்டர் நிர்மலா கூறுகையில், ''பிரச்னை எதுவும் இல்லை, மாணவர்களிடையே பிரச்னை ஏற்படுவதற்கு முன்பே சென்று விட்டேன்,'' என்றார்.