/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெண் கொலை விவகாரம் எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம் பெண் கொலை விவகாரம் எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
பெண் கொலை விவகாரம் எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
பெண் கொலை விவகாரம் எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
பெண் கொலை விவகாரம் எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
ADDED : ஜூன் 26, 2025 01:29 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, அங்கம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கவியரசு, 32. இவரது மனைவி ஜெயமோகனா, 29. இவரது நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர் கவியரசு, நேற்று முன்தினம் மாலை, கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன், ஜெயமோகனாவை கவியரசு தாக்கி விட்டு வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக, மத்துார் போலீசில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என, பலியான ஜெயமோகனாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மத்துார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., அருட்செல்வம் மெத்தனமாக செயல்பட்டதால், அவர் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.