/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு கலைக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு அரசு கலைக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
அரசு கலைக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
அரசு கலைக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
அரசு கலைக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 27, 2025 01:28 AM
அரூர், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார்.
அரூர் டி.எஸ்.பி., ராமமூர்த்தி (பொறுப்பு), மாணவர்களிடையே போதை பொருட்களின் அபாயம், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் பேசினார்.
தொடர்ந்து, போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின், கல்லுாரி வளாகத்தில் இருந்து, அரூர் பஸ் ஸ்டாண்ட் வரை, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் கல்லுாரியின் போதை ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் குமார், நாட்டு நலப்
பணிதிட்ட அலுவலர் கோபிநாத் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.