Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மேய்ச்சல் நிலமாக மாறிய அதியமான்கோட்டை ஏரி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

மேய்ச்சல் நிலமாக மாறிய அதியமான்கோட்டை ஏரி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

மேய்ச்சல் நிலமாக மாறிய அதியமான்கோட்டை ஏரி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

மேய்ச்சல் நிலமாக மாறிய அதியமான்கோட்டை ஏரி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

ADDED : ஜூன் 03, 2024 07:19 AM


Google News
தர்மபுரி : அதியமான்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கடந்தாண்டும், இந்தாண்டும்போதிய பருவ மழை இல்லை. இதனால், அதியமான்கோட்டை ஏரி நீரின்றி, மேய்ச்சல் நிலமாக மாறியது. ஏரிக்கு மழைநீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, ஏரியை துார்வாரி மழை நீர் முறையாக வந்து சேர, உரிய நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அதியமான்கோட்டை பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், மழையின்போது, 200 ஏக்கர் பரப்பளவுள்ள அதியமான்கோட்டை ஏரியில் மழைநீர் தேங்கும்போது, சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இதன் மூலம், இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தீரும். கடந்தாண்டு முதல் தற்போது வரை பருவமழை போதியளவில் பெய்யவில்லை.

இதனால், அதியமான்கோட்டை ஏரியின் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது. எனவே, ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வாரி சீரமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. எனவே, அதியமான்கோட்டை ஏரியில் மழை நீரை முழுவதும் தேங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us