/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை
தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை
தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை
தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை
ADDED : ஜூன் 04, 2024 04:51 AM
தர்மபுரி: தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
தர்மபுரி லோக்சபா தொகுதி, தர்மபுரி மாவட்டத்தில், 5, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் தொகுதி என, 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. இதில், தர்மபுரி லோக்சபா தொகுதியில், ஏப்.,19ல் நடந்து முடிந்த தேர்தலில், 81.20 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.
இதில், பாலக்கோடு சட்டசபை தொகுதியில், 2,40,181 வாக்காளர்கள், பென்னாகரம், 2,47,495, தர்மபுரி, 2,61,688, பாப்பிரெட்டிப்பட்டி, 2,58,070, அரூர் (தனி), 2,45,587 தர்மபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 5 சட்டசபை தொகுதிகளில், 12,53,021 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில், 2,71,875 வாக்காளர்கள் என, தர்மபுரி லோக்சபா தொகுதியில் ஒட்டு மொத்தமாக, 15,24,896 வாக்காளர்கள் உள்ளனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கும் நிலையில், தர்மபுரி லோக்சபா தொகுதிக்காக, தர்மபுரி அடுத்த செட்டிகரையிலுள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டசபை தொகுதிக்கு, 14 மேஜை என, 6 சட்டசபை தொகுதிக்கும் தபால் மற்றும் மின்னனு ஓட்டு எண்ண மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 272 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 20 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதேபோல்,
பென்னாகரம், 21 சுற்றுகள், தர்மபுரி, 22 சுற்றுகள், பாப்பிரெட்டிப்பட்டி, 23 சுற்றுகள், அரூர், 22 சுற்றுகள், மேட்டூர், 23 சுற்றுகள் என, 1,805 ஓட்டுச்சாவடிகளில் பதிவான
ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகிறது.