/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உடைந்த தடுப்பணையை மீண்டும் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கைஉடைந்த தடுப்பணையை மீண்டும் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை
உடைந்த தடுப்பணையை மீண்டும் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை
உடைந்த தடுப்பணையை மீண்டும் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை
உடைந்த தடுப்பணையை மீண்டும் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 07:19 AM
நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் பஞ்.,ல் கழனிகாட்டூர் பகுதி உள்ளது.
இங்கு கடந்த, 2022 ஆக., மாதத்தில் பெய்த கனமழையால் அப்பகுதி நீரோடைகளின் நடுவே ஆங்காங்கே நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டிருந்த, 3 தடுப்பணைகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த தடுப்பணைகள் மழை காலங்களில் நீரை சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய காரணமாக இருந்தன. இதனால், கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருந்தது. தடுப்பணைகள் உடைந்த நிலையில் கடந்தாண்டு நீரோடையில் வந்த தண்ணீர் முழுவதும் நேரடியாக ஆறுகளின் வழியாக நாகாவதி அணைக்கு சென்று விட்டது. மழைக்காலங்களில் மழை நீரை சேமித்தால் மட்டுமே, கோடைகாலத்தை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இது குறித்து, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் பி.டி.ஓ., உள்ளிட்டோருக்கு, நாகர்கூடல் பஞ்., தலைவர் குமார் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.