/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தொடர் மழை எதிரொலி விவசாய கருவிகள் விற்பனைதொடர் மழை எதிரொலி விவசாய கருவிகள் விற்பனை
தொடர் மழை எதிரொலி விவசாய கருவிகள் விற்பனை
தொடர் மழை எதிரொலி விவசாய கருவிகள் விற்பனை
தொடர் மழை எதிரொலி விவசாய கருவிகள் விற்பனை
ADDED : ஜன 13, 2024 04:08 AM
நல்லம்பள்ளி: தர்மபுரியில், சாலையோரத்தில் கொல்லன் பட்டறை அமைத்து, விவசாய உழவுகருவிகளை தயாரித்து விற்பனை செய்வதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பரவலாக பருவமழை பெய்தது.
இதனால், மாவட்டத்திலுள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்டவைகளில் ஓரளவுக்கு தண்ணீர் நிரம்பியது. இதனால், விவசாயப்பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் சிலர், சாலையோரம் கொல்லன் பட்டறை அமைத்து, அங்கேயே தீ மூட்டி மண்வெட்டி, கடப்பாறை, களைவெட்டி, கலப்பை, கோடாரி, கதிர் அரிவாள் உள்ளிட்ட பல்வேறு விவசாய கருவிகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.இவைகளை, 100 முதல், 700 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மேலும், பொதுமக்கள் தரும் இரும்புகளை வைத்து அவர்கள் கேட்க்கும் கருவிகளையும் செய்து தருகின்றனர். இதை, உள்ளூர் வாசிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.