/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்
ADDED : ஜூன் 09, 2025 04:00 AM
தர்மபுரி: தர்மபுரி நகர் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டிலுள்ள, கட்டண கழிப்பறைகள், நகராட்சி மூலம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்-ளன. அங்கு சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், மலம் கழிக்க, 3 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பொதுமக்களிடமிருந்து 5 ரூபாய் வசூல் செய்யப்படுகி-றது. கட்டணம் குறித்து கேட்டால், அங்கு பணியில் உள்ளவர்கள் கூறும் கட்டணத்தை தரா விட்டால், கழிவறைக்கு செல்ல அனு-மதி மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து செல்கின்றனர். இந்நிலையில், கழிப்பறையை முறையாக பராமரிக்காததால், கழிப்பறையில் துர்-நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்ப-துடன், கழிப்பறையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.