/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வெடி பொருட்கள் பதுக்கி விற்றவருக்கு 5 ஆண்டு சிறைவெடி பொருட்கள் பதுக்கி விற்றவருக்கு 5 ஆண்டு சிறை
வெடி பொருட்கள் பதுக்கி விற்றவருக்கு 5 ஆண்டு சிறை
வெடி பொருட்கள் பதுக்கி விற்றவருக்கு 5 ஆண்டு சிறை
வெடி பொருட்கள் பதுக்கி விற்றவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : பிப் 24, 2024 03:51 AM
கிருஷ்ணகிரி: வெடி பொருட்களை பதுக்கி விற்றவருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த ராமா
புரத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 61. இவர் கடந்த, 2017ல், அனுமதியின்றி தன் வீட்டில் வெடி பொருட்களான ஜெலட்டின் குச்சி, எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் போன்ற பொருட்களை பதுக்கி, கல்குவாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்த நிலையில், இவ்வழக்கு கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் கடந்த, 7 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி மோகன்ராஜ் தன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு, ஐந்துஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும், 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.