/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
ADDED : ஜூன் 06, 2024 04:06 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த சந்தனுாரிலுள்ள பாலமுருகன் கோவிலில், கிருத்திகையையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
தர்மபுரி சந்தனுார் பாலமுருகன் கோவிலில், வைகாசி மாத கிருத்திகையையொட்டி, இக்கோவில் மூலவர் சுவாமிக்கு நேற்று பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவர் பஞ்சலோக முருகர், வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், குளியனுார் முருகன் கோவில், அன்னசாகரம் கோடிவிநாயகர் முருகன் கோவில், நெசவாளர் காலனி சிவசக்தி முருகன் கோவில், எஸ்.வி.,ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில், வைகாசி கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.