/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு தி.மு.க., - மா.செ., நன்றி தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு தி.மு.க., - மா.செ., நன்றி
தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு தி.மு.க., - மா.செ., நன்றி
தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு தி.மு.க., - மா.செ., நன்றி
தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு தி.மு.க., - மா.செ., நன்றி
ADDED : ஜூன் 06, 2024 03:52 AM
தர்மபுரி: தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மணியை ஆதரித்து பிரசாரம் செய்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுக்கு நன்றி.
வெற்றிக்கு இரவு, பகல் பாராமல் உழைத்த, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, மா.கம்யூ., - இ.கம்யூ., - ம.தி.மு.க., - வி.சி., - த.வா.க., மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க.,வின் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டசபை தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, தர்மபுரி லோக்சபா தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், அனைவருக்கும் நன்றி. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.