/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண்புழு உரம் தயாரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல் மண்புழு உரம் தயாரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
மண்புழு உரம் தயாரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
மண்புழு உரம் தயாரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
மண்புழு உரம் தயாரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2024 04:22 AM
தர்மபுரி,: தர்மபுரி மாவட்டத்திலுள்ள விவசாயிகள், கட்டாயம் மண்புழு உரம் தயாரிக்க வேண்டும் என, வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளின் உயிர் உரமாக விளங்குவது, மண்புழு உரம்.
மேலும், இது இயற்கையின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றாக அமைந்து, மண் படலத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், அதற்கு புத்துயிரூட்டவும் மண்புழுவே இயற்கையானதாக உள்ளது. மண்புழுவில், 3 வகையான புழுக்கள் உள்ளன.மண்புழு உரம் அதிகளவில் விற்பனைக்கு இருந்தாலும், அதை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், சிலிபாலின் பைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறையை எளிதாக்கி வருகிறது. அதன்படி, விவசாயிகள் தங்களின் விளை நிலங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை கழிவுகளையும், மண்புழுக்களையும் கொண்டு, மண்புழு உரத்தை தயாரிக்கலாம். இந்த சிலிபால் பை தொட்டி அமைக்க, 250 ஜீ.எஸ்.எம்., 4 கிலோ எடை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், ஒரு அங்குலம் கனம் கொண்ட குழாய் அல்லது மூங்கில் சவுக்கு குச்சிகள் தேவைப்படும். இந்த தொட்டியின் அடிப்பகுதியில், தேங்காய் நார், அரை அடி உயரத்துக்கு இருக்குமாறு நிரப்ப வேண்டும்.இதற்கு தகுந்தவாறு ஈரப்பதம் உள்ளபடி, நீரை தெளிக்க வேண்டும். இந்த பையின் மேல்புறத்தை, நிழல் வலை கொண்டு இருட்டான அறையில், 40 சதவீத ஈரப்பதத்தில் சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், 25 சதவீதம் ரசாயன உரச்செலவு குறைந்து விடும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.