/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 04:08 AM
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, மாரண்டஹள்ளி--வெள்ளி சந்தை சாலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஸ்கோடா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. காரில், 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 111 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த, தர்மபுரி மாவட்டம், கூத்தாண்டஹள்ளியை சேர்ந்த மகேந்திரன், 46; மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், அண்ணான்ட-பட்டியை சேர்ந்த வெங்கடேசன், 41 ஆகியோரை மாரண்ட-ஹள்ளி போலீசார் கைது செய்தனர்.