ADDED : ஜூலை 28, 2024 04:08 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லுாரி மாணவ மாணவிக-ளுக்கு சேலம் தனியார் மருத்துவமனை சார்பில், சிறப்பு பல் பரி-சோதனை முகாம் முதல்வர் ரவி தலைமையில் நடந்தது.
பல் டாக்டர் கவுசல்யா, பற்கள் பாதுகாப்பு குறித்து பேசினார். முகாமில், 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பற்களை பரிசோதித்து கொண்டனர். ஏற்பாடுகளை நுாலகர் கல்யாணி, உதவி பேராசிரியர் அருண் நேரு, தனியார் மருத்துவமனை விற்-பனை நிர்வாகி முகமது பைஸ் ஆகியோர் செய்திருந்தனர்.