/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொப்பூர் சாலை பணி விரைவில் தொடக்கம்: முன்னாள் எம்.பி., தொப்பூர் சாலை பணி விரைவில் தொடக்கம்: முன்னாள் எம்.பி.,
தொப்பூர் சாலை பணி விரைவில் தொடக்கம்: முன்னாள் எம்.பி.,
தொப்பூர் சாலை பணி விரைவில் தொடக்கம்: முன்னாள் எம்.பி.,
தொப்பூர் சாலை பணி விரைவில் தொடக்கம்: முன்னாள் எம்.பி.,
ADDED : ஜூலை 28, 2024 04:07 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக, தர்மபுரி முன்னாள் தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
டெல்லியில் கடந்த, 17 அன்று மத்திய பழங்குடியினர் விவகாரத்-துறை அமைச்சர் ஜூல் ஓரமை சந்தித்து, குறும்பர் லம்பாடி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இணைக்கும் தொடர் முயற்சியின், 17 வது தனிநபர் மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க நேரில் சென்று வலியுறுத்தினேன். அதனை தொடர்ந்து, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அதிகாரி-களை சந்தித்து, தொப்பூர் மலைப்பாதை சீரமைப்பு மற்றும் ஏற்க-னவே கடிதம் மூலம் தெரிவித்த, தேசிய நெடுஞ்சாலையில் இரு இடங்களில் மேம்பாலம் அமைப்பது சம்மந்தமாக, அனுப்பப்-பட்ட கடிதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. இந்-நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடிதம் மூலம் பதில் அனுப்பி உள்ளார். அதில், தொப்பூர் மலைப்பாதையில், என்.எச்.,44 சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும். காரிமங்கலம் அருகே, அகரம் பிரிவு சாலை மற்றும் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதுார் பிரிவு சாலை ஆகிய இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்ட அதிகா-ரிகள் ஆய்வு செய்து வருவதாக கடிதம் அனுப்பியுள்ளார். இவ்-வாறு கூறினார்.