/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உலர் தீவனம் வழங்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல் உலர் தீவனம் வழங்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
உலர் தீவனம் வழங்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
உலர் தீவனம் வழங்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
உலர் தீவனம் வழங்க கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2024 04:07 AM
அரூர்: அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதியளவில் பெய்ய-வில்லை. இதனால் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, கடந்த காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில், வறட்சி நிவாரண திட்டத்தில், மொரப்பூர், அரூர், மோளையானுார், புட்-டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட, 12 இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில், விற்பனை கிடங்கு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம், மானிய விலையில் உலர் தீவனமாக வைக்கோல் வழங்கப்பட்டு வந்தது.
வறட்சி நிலை சீராகும் வரை, ஒரு கால்நடைக்கு நாள் ஒன்றுக்கு, 3 கிலோ வீதம் அதிகபட்சம், 5 கால்நடைகளுக்கு வாரத்திற்கு, 150 கிலோ வரை கால்நடை வளர்ப்போர் ஒருவருக்கு உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்று, 2 ரூபாய்க்கு வழங்-கப்பட்டது. எனவே, கால்நடை வளர்ப்போர் நலன் மற்றும் அவர்-களின் போக்கு
வரத்து வசதியை கருத்தில் கொண்டு அனைத்து கால்நடை மருந்த-கங்களிலும் மீண்டும், உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.