/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் போராட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் போராட்டம்
ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் போராட்டம்
ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் போராட்டம்
ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் போராட்டம்
ADDED : ஜூன் 15, 2024 07:45 AM
பென்னாகரம் : பரிசல் சவாரி டெண்டரை தங்களுக்கு வழங்க வேண்டும் என கூறி, பரிசல் ஓட்டிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல் பரிசல் துறை மற்றும் சுங்கவரி கட்டண கேட் நேற்று முன்தினம், பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. இதில், சுங்கவரி கட்டண கேட், ஒரு கோடியே, 24 லட்சம் ரூபாய்க்கும், பரிசல் துறை, ஒரு கோடியே, 45 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு பரிசல் துறையை, பரிசல் ஓட்டிகளே ஏலம் எடுத்திருந்தனர். நீர்வரத்து அதிகரிப்பு, பரிசல் துறை மேம்பாட்டு பணி, நீர்வரத்து சரிவு உள்ளிட்ட காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பரிசல் ஓட்டிகள், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், புதிய பல நிபந்தனைகளை கொண்டு வந்து, நேற்று முன்தினம் வேறு ஓரு நபருக்கு ஏலம் விடப்பட்டது. இதை கண்டித்தும், ஏலத்தை ரத்து செய்ய கோரியும் நேற்று, பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரிசல் சவாரி செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.