/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பென்னாகரத்தில் மகனை கொன்ற தந்தை கைது பென்னாகரத்தில் மகனை கொன்ற தந்தை கைது
பென்னாகரத்தில் மகனை கொன்ற தந்தை கைது
பென்னாகரத்தில் மகனை கொன்ற தந்தை கைது
பென்னாகரத்தில் மகனை கொன்ற தந்தை கைது
ADDED : ஜூன் 15, 2024 07:44 AM
பென்னாகரம் : பென்னாகரம் அடுத்த தாசம்பட்டியில், நேற்று முன்தினம் காலை சிறுவன் ஒருவன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தான். பென்னாகரம் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். அதில் இறந்தது, பென்னாகரம் அருகே திப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் மகன் யாதவன், 16, என தெரியவந்தது. இவர் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
சந்தேகப்பட்டு சிறுவனின் தந்தை பெருமாளிடம் விசாரித்த போது, மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில், பெருமாளுக்கு குமுதா என்ற மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் குமுதா இரண்டு மகன்களுடன் தாசம்பட்டியில் உள்ள தன் உறவினர் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி திறந்ததால், இரு மகன்களும்
திப்பட்டி வந்துள்ளனர். இதில் இளைய மகனை அழைத்து சென்று, வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் பெருமாள் சேர்த்து விட்டு, குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு மூத்த மகன் யாதவன் பள்ளி செல்ல தயாராக இருந்தார். அங்கு வந்த பெருமாள், உனது அம்மாவை அழைத்து வரலாம் வா என கூறி அதிகாலை, 4:00 மணிக்கு தாசம்பட்டிக்கு வந்தனர். அங்கு ஊர் எல்லையில் நின்றுகொண்டு, அம்மாவை கூட்டி வா என தாக்கியுள்ளார். அதற்கு யாதவன் மறுக்கவே, அங்கிருந்த கல்லால் தாக்கி பெற்ற மகனையே கொலை செய்ததது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் போலீசார், பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.