ADDED : ஜூன் 13, 2024 07:06 AM
தர்மபுரி : தர்மபுரி குப்பாகவுண்டர் தெருவிலுள்ள, பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இதில், மூலவர் மாரியம்மன் சிலையை மாற்றி, புதிய சிலை அமைக்க, ஊர்மக்கள் முடிவு செய்து, புதிய சிலை வடிவமைக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள சித்தி விநாயகர் கோவில், பூவாடை காவேரியம்மன் கோவில் மற்றும் முனியப்ப சுவாமி ஆகிய கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 6- அன்று தொடங்கியது.
நேற்று காலை யாக சாலையில் இருந்து புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு சென்று, சித்தி விநாயகர், மாரியம்மன், பூவாடை காவேரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபத்திலுள்ள காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 10ல் விநாயகர் வழிபாடு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 7:30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.