ADDED : ஜூன் 13, 2024 07:05 AM
அரூர் : அரூரில், பாட்சாபேட்டை, நான்குரோடு, திரு.வி.க., நகர், என்.என்.மகால் உள்ளிட்ட இடங்களில் சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் மழை நீர் தேங்குகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில், வடிநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.