/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாததால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு; பிரேமலதாதேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாததால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு; பிரேமலதா
தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாததால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு; பிரேமலதா
தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாததால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு; பிரேமலதா
தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாததால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு; பிரேமலதா
ADDED : ஜூலை 08, 2024 07:34 AM
தர்மபுரி: ''தமிழக தேர்தல் ஆணையத் தின் மீது நம்பிக்கை இல்லாததால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை,'' என்று,- தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க., தொண்டர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று வந்த பிரேமலதா, தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:பி.எஸ்.பி., கட்சி தமிழக தலை வர் ஆம்ஸ்ட்ராங், முதல்வரின் கொளத்துார் தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழு வதும் கடந்த மூன்று மாதத்தில் ஆறு படுகொலை நடந்துள்ளது. திருநெல்வேலி காங்., தலைவர் கொலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சேலம், அ.தி.மு.க., பிரமுகர் கொலை மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை யில், எட்டு பேர் அவர்களாகவே சரணடைந்தனர். போலீசார் கைது செய்ததாக முதல்வர் சொல்கிறார்.
கள்ளக்குறிச்சியில், 70 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரி ழந்தனர். இந்த கொலை, உயிரி ழப்பு போன்ற பாதிப்புகள் எல் லாம், பட்டியலின மக்களுக்கு தான் வருகிறது. மேலும், தி.மு.க.. கூட்டணியிலுள்ள திருமாவள வன், செல்வப்பெருந்தகை இருவரும், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனர். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். இதனால் உயிரிழப்பு ஏற்படாது. விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும். தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர் தலை தே.மு.தி.க.,வினர் புறக்கணிப்பர். இதுவும், இடைத் தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் என்பதற்கும் ஒரே பொருள் தான். தமிழகத்தில் எல்லா தேர்தலிலும், தே.மு.தி.க., போட்டியிட்டது. ஈரோடு இடைத் தேர்தலில் பணம், அதிகாரத்தை பயன்படுத்தி, அராஜகம் செய்து தி.மு.க., வெற்றி பெற்றது. இதை தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.