Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் நெல் கொள்முதல் நிலையம் நடப்பாண்டிலாவது திறக்க கோரிக்கை

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் நடப்பாண்டிலாவது திறக்க கோரிக்கை

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் நடப்பாண்டிலாவது திறக்க கோரிக்கை

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் நடப்பாண்டிலாவது திறக்க கோரிக்கை

ADDED : ஜூலை 08, 2024 05:46 AM


Google News
அரூர் : நடப்பாண்டிலாவது, அரூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், அரூர் சுற்று வட்டாரத்தில், பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், இழப்பு ஏற்படுவதாக விவ-சாயிகள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத்தலைவர் திருமலை கூறியதாவது: தமிழக அரசு நெல்லுக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர். இதனால், விவசா-யிகள் நஷ்டம் அடைகின்றனர். இதை கருத்தில் கொண்டு, விவ-சாயிகள் சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் செய்ய அரூரில், அரசு சார்பில், நேரடி கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, குறைதீர் கூட்டத்தில், விவசா-யிகள் பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த, 2021 ஜன., 20ல், வேளாண் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது குறித்து, ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பிப்., மாத இறுதியில், நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதுவரை திறக்கவில்லை. பல ஆண்டு காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நடப்பாண்டில், அரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து துவங்க வேண்டும். இது குறித்து அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்-டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us