/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் வலியுறுத்தல் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 05:45 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள பெரிய ஏரி, 160 ஏக்கர் பரப்ப-ளவு கொண்டது. கடந்த காலங்களில் ஏரி நிரம்பியவுடன், அதிலி-ருந்து வெளியேறும் உபரி நீர் ராஜ வாய்க்கால் மூலம், அரூரி-லுள்ள பெரியார் நகர், குபேந்திரன் நகர், மஜீத் தெரு, வர்ணீஸ்-வரர் கோவில் உள்ளிட்ட முக்கியப்பகுதிகள் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வாணியாற்றில் கலக்கும். ராஜ-வாய்க்காலை ஆக்கிரமித்து, பல இடங்களில் கட்டடங்கள் கட்-டப்பட்டுள்ளதால், பெரிய ஏரியில் இருந்து, வெளியேறும் உபரி நீர் மற்றும் மழை நீர் செல்ல முடியாத நிலையுள்ளது. இது குறித்து சட்டசபை மனுக்கள் குழுவுக்கு, கடந்த, 2008ல்- மனு செய்யப்பட்டது. இதையடுத்து, மனுக்கள் குழுவினர் பார்வை-யிட்டு, ராஜவாய்க்கால் வாய்க்கால்
ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வார பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், இதுவரை ராஜவாய்க்கால் துார்வாரப்
படவில்லை. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிக-ளிடம் பொது மக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், ராஜ-வாய்க்கால் ஆக்கரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.