/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலையில் உலா வரும் கழுதைகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி சாலையில் உலா வரும் கழுதைகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் உலா வரும் கழுதைகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் உலா வரும் கழுதைகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் உலா வரும் கழுதைகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : ஜூலை 08, 2024 05:45 AM
கம்பைநல்லுார், : கம்பைநல்லுார் சாலைகளில் கழுதைகளின் நடமாட்டம் அதிக-ரித்துள்ளதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் நடமாடி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது, இவற்றுடன் அதிகளவில் கழுதைகள் நட-மாட்டம் இருப்பதால், வாகனங்களை ஓட்டிகள் மற்றும் பொது-மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி சாலை, இருமத்துார் ரோடு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் தினமும் கழுதை மற்றும் பிற கால்நடைகளால், மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இரவு, பகல் என சாலையில் சுற்றித்திரியும் கழுதைகளால், விபத்து அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் கழு-தைகளை கட்டுப்படுத்த டவுன் பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.