/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம் நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்
நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்
நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்
நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 21, 2024 09:29 AM
தர்மபுரி, : நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், நேற்று தர்-மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயன், பொருளாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு போக்-குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் குப்புசாமி வாழ்த்தி பேசினார். இதில், மின்வாரிய ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கடந்த ஜன., 1 முதல் மே, 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி, காப்பீடு நிறுவ-னத்திடம் பணப்பயன்களை முழுமையாக வழங்க வேண்டும். விதவை, விவாகாரத்தானவர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வின் அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களுக்கு, பண பயன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.