/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாய்ந்த நிலையில் ஆபத்தான கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த நிலையில் ஆபத்தான கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்
சாய்ந்த நிலையில் ஆபத்தான கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்
சாய்ந்த நிலையில் ஆபத்தான கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்
சாய்ந்த நிலையில் ஆபத்தான கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்
ADDED : ஜூலை 21, 2024 09:29 AM
தர்மபுரி : தர்மபுரி அருகே, சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்-பங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில், ஏராள-மானோர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரு-கின்றனர். தர்மபுரி மதிகோண்பாளையத்திலி-ருந்து, செட்டிக்கரை வரை செல்ல, 4 கிலோ மீட்டர் துாரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. இதன் வழியாக செட்டிக்கரையிலுள்ள இஞ்ஜினியரிங் கல்லுாரிக்கு நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர்.
இச்சாலையில், 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இவை, விவசாய நிலத்திலும், சாலையிலும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்-ளன. இதை, மின்வாரியத்துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, பெரிய-ளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், சாய்ந்த நிலையிலுள்ள இந்த மின்கம்பங்களை சரிபடுத்த, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.