/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆபத்தான திறந்தவெளி கிணற்றை மூட வலியுறுத்தல் ஆபத்தான திறந்தவெளி கிணற்றை மூட வலியுறுத்தல்
ஆபத்தான திறந்தவெளி கிணற்றை மூட வலியுறுத்தல்
ஆபத்தான திறந்தவெளி கிணற்றை மூட வலியுறுத்தல்
ஆபத்தான திறந்தவெளி கிணற்றை மூட வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 01:15 AM
ஆபத்தான திறந்தவெளி கிணற்றை மூட வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் சமத்துவபுரம், அலமேலுபுரம், சம்புவராயன் கோவில் தெரு, உள்ளிட்ட, 15 வார்டுகள் உள்ளன. 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதியில், பழமையான கிணறு உள்ளது. தற்போது இக்கிணறு பாழடைந்து, சேறும் சகதியுமாக திறந்த நிலையில், குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதில் தேங்கும் கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியான அங்கு, சிறுவர்கள் கிணற்றின் மேல் அமர்ந்து விளையாடுகின்றனர். சிலர் மாலை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும் அதை பயன்படுத்தி வருகின்றனர். திறந்தவெளி கிணறாக உள்ளதால், விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, திறந்தவெளி கிணற்றின் மேல் பகுதியில், கம்பி வலை அமைக்க வேண்டும். இல்லையெனில் பயனற்று கிடப்பதால், கிணற்றை மூட வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.