/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எள் விதைப்புக்கு பங்குனி பட்டத்தைவிவசாயிகள் பயன்படுத்த அழைப்பு எள் விதைப்புக்கு பங்குனி பட்டத்தைவிவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
எள் விதைப்புக்கு பங்குனி பட்டத்தைவிவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
எள் விதைப்புக்கு பங்குனி பட்டத்தைவிவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
எள் விதைப்புக்கு பங்குனி பட்டத்தைவிவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
ADDED : மார் 21, 2025 01:15 AM
எள் விதைப்புக்கு பங்குனி பட்டத்தைவிவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
தர்மபுரி:பங்குனி மாத பட்டத்தை பயன்படுத்தி, எண்ணெய் வித்து பயிரான, எள் விதைப்பு செய்யலாம் என, வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், எள் சாகுபடி செய்ய, மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் அல்லது, 5 முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை நன்றாக உடைத்து விட வேண்டும். மண்ணின் அடி மண் இறுக்கத்தை உடைக்க உளிக் கலப்பையை கொண்டு, 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு ஒரு ஹெக்டருக்கு, 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவை பொறுத்து, 10 அல்லது, 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்க வேண்டும். நீர் தேங்குவதை தடுக்க சமன்படுத்த வேண்டும். ஒரு ஹெக்டருக்கு, 5 கிலோ விதை எள் தேவைப்படும்.
விதைநேர்த்தி ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பிற்கு முன், விதை நேர்த்தி செய்யவும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாண கொல்லியுடன் விதை நேர்த்தி செய்வதை தவிர்க்கவும். ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும். விதையின் அளவில் நான்கு மடங்கு மணலுடன் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக துாவ வேண்டும். 3 செ.மீ., ஆழத்தில் விதைகளை விதைத்து, மண் கொண்டு மூட வேண்டும். இடைவெளி வரிசைக்கு வரிசை, 30 செ.மீ., இடைவெளியும், செடிக்கு செடி, 30 செ.மீ., இடைவெளியும் கொடுக்க வேண்டும். நெல் தரிசில், விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு, 11 செடிகள் வீதம் இருக்குமாறு, பயிர் கலைத்தல் வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.