/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'புதுமை பெண்' திட்டத்தில்14,644 மாணவியர் பயன் 'புதுமை பெண்' திட்டத்தில்14,644 மாணவியர் பயன்
'புதுமை பெண்' திட்டத்தில்14,644 மாணவியர் பயன்
'புதுமை பெண்' திட்டத்தில்14,644 மாணவியர் பயன்
'புதுமை பெண்' திட்டத்தில்14,644 மாணவியர் பயன்
ADDED : மார் 21, 2025 01:15 AM
'புதுமை பெண்' திட்டத்தில்14,644 மாணவியர் பயன்
தர்மபுரி:'புதுமை பெண்' திட்டத்தில், 91 கல்லுாரிகளில், 14,644 மாணவியர் மாதந்தோறும், 1,000 ரூபாய்- பெற்று பயனடைவதாக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'புதுமை பெண்' திட்டத்தில் பயன்பெற்ற மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் சதீஸ் கலந்துரையாடி, கற்றல் திறன் மற்றும் கல்வி வழிகாட்டுதல்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவர் தெரிவித்ததாவது:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில், உயர்கல்வி பயிலும் வரையில் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கும், 'புதுமை பெண்' திட்டத்தை, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம், 6 முதல், பிளஸ் 2 வரையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 -ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், தற்போது, தர்மபுரி மாவட்டத்தில், 91 கல்லுாரிகளில், 14,644 மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.