/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 12, 2025 05:15 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் அடுத்த கிள்ளையைச் சேர்ந்தவர் அஜித்குமார், 32; இவர், நேற்று மதியம் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷன் எதிரில் நின்று கொண்டிருந்தார்.
திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண் ணெய்யை தன மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. உடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அஜித்குமாரை மீட்டு, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.